‘ஆட்சி கவிழ்வதற்கான சூழ்நிலை தொடங்கி விட்டது’ மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் ஆட்சி கவிழ்வதற்கான சூழ்நிலை தொடங்கி விட்டது என தி.மு.க. இளைஞர் அணி விழாவில் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை,
தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவையில் வைரவிழா மற்றும் 94-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் வரவேற்று பேசினார்.
இளைஞர் அணி துணை செயலாளர்கள் ப.தாயகம் கவி எம்.எல்.ஏ., அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., எஸ்.ஜோயல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ராஜேந்திரன் தமிழுலகில் கருணாநிதி என்ற தலைப்பிலும், பேராசிரியை பர்வீன் சுல்தானா கலையுலகில் கருணாநிதி என்ற தலைப்பிலும், டாக்டர் எழிலன் சட்டமன்றத்தில் கருணாநிதி என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கு நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சட்டமன்றம் சுவாரசியமாக இருக்காது
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து பங்கேற்றுவிட்டு வந்துள்ளேன். கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதை இப்போது சொன்னால், நாளை(இன்று) சட்டமன்றம் சுவாரசியமாக இருக்காது.
நேற்று ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் வெளிவந்த செய்தி உங்களுக்கு தெரியும். அந்த டி.வி.க்காரர்கள் என்னிடம் பேசி எனது கருத்தை கேட்டனர். அவர்களிடம் நான் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோதே ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று, சில விதிமுறைகளை சுட்டிக்காட்டி முடிந்தவரை போராடி பார்த்தோம். ஆனால் காவல்துறையினர் எங்களை அடித்து துன்புறுத்தி வெளியில் தூக்கி வந்து போட்டனர். ஆனால், அந்த சம்பவம் 100-க்கு நூறு உண்மை என்பது டி.வி. மூலம் தெரியவந்துள்ளது என்றேன்.
ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு இதுவரை அடித்த கொள்ளை போதாது என்று கொள்ளை அடிக்கும் அதிகாரத்தை யார் வைத்து இருக்க வேண்டும் என்பதில் போட்டி போட்டு பேரம் பேசி ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருப்பதை டி.வி.யில் பார்த்தோம்.
என்னிடம் நெருக்கமாக உள்ளவர்கள் இன்னும் ஏன் அந்த ஆட்சியை விட்டு வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என கோபப்படுகிறார்கள். நான் கருணாநிதியின் மகன். எனவே அவரது வழிப்படித்தான் செயல்படுவேன்.
ஆட்சி கவிழ்வது தொடங்கிவிட்டது
தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டபோது, நாங்கள் ஆட்சியை கவிழ்க்க விரும்பவில்லை. அவர்களாகவே ஆட்சியை கலைத்துக் கொள்வார்கள் என்று கூறினேன். அது நேற்று முதல் தொடங்கி விட்டது. எனவே இந்த ஆட்சி கலைவது நாளையா? நாளை மறுநாளா? அல்லது இந்த நிகழ்ச்சி முடிவதற்கு முன்பா? என்பது தெரியாது.
இவ்வாறு அவர் பேசினார்.