வீடியோவில் இருப்பது நான் தான் ஆனால் அது என்னுடைய குரல் இல்லை.சரவணன் எம்.எல்.ஏ. விளக்கம்
வீடியோவில் இருப்பது நான் தான் ஆனால் அது என்னுடைய குரல் இல்லை.சரவணன் எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்து உள்ளார்.
சென்னை
சரவணன் எம்.எல்.ஏ. மதுரையில் இருந்து அவசரமாக விமானத்தில் சென்னை புறப்பட்டு வந்தார். இன்று மதியம் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் சரவணன் எம்.எல்.ஏ. அவரை சந்தித்து பேசினார். இந்த பணபேர வீடியோ பற்றி அவர் விளக்கம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
குதிரை பேரம் குறித்து பேசியதாக வெளியிடப்பட்ட வீடியோ பொய்யானது. வீடியோவில் இருப்பது நான் தான் ஆனால் அது என்னுடைய குரல் இல்லை. குரல் டப்பிங் செய்து வெளியிடபட்டு உள்ளது.கருணாஸ், தனியரசு, தமீம் அன்சாரி பற்றி நான் எதுவுமே பேசவில்லை. வீடியோ குறித்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வழக்கு தொடருவேன் இவ்வாறு அவர் கூறினார்.