அன்னிய செலாவணி மோசடி வழக்கு சசிகலா மனு தள்ளுபடி
அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக சசிகலா தாக்கல் செய்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை,
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய காணொலிக்காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த கோர்ட்டு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்போது, கேட்கப்படும் கேள்விகளை தமிழில் முன்கூட்டியே வழங்கவேண்டும் என்று சசிகலா சார்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. முன்கூட்டியே கேள்விகளை வழங்குவதற்கு அமலாக்கப்பிரிவு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று இந்த வழக்கு எழும்பூர் 1–வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஜாகீர்உசேன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கேள்விகளை முன்கூட்டியே தமிழில் வழங்கவேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை மனுவை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.குற்றச்சாட்டுகள் பதிவின்போது கேள்விகளை முன்கூட்டியே தெரிவிக்கும் நடைமுறை இல்லை என்று மாஜிஸ்திரேட்டு குறிப்பிட்டார். காணொலி காட்சி மூலம் சசிகலாவிடம் எப்போது விசாரணை நடைபெறும் என்பது பற்றி கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.