ஓ.பி.எஸ். அணி முடிந்துபோன முதியோர் இல்லமாகும் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தாக்கு

ஓ.பி.எஸ். அணி முடிந்துபோன முதியோர் இல்லமாகும் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தாக்கி உள்ளார்.

Update: 2017-06-12 06:03 GMT

கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளரும் தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி கூறியதாவது:-

ஓ.பி.எஸ். அணி என்பது முடிந்துபோன முதியோர் இல்லமாகும். அவர்கள் நினைவாற்றலை இழந்து உள்ளதால் இனி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்று சவால் விட்ட ஓ.பி.எஸ். இதுவரை அதைச் செய்யவில்லை.

அவர் அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து சென்றபோது இருந்த 12 எம்.எல்.ஏ.க்களை தவிர வேறு யாரும் அவருடன்  செல்லவில்லை. தொண்டர்கள் மத்தியில் அவருக்கு தரவு இல்லை என்பதால் உளறிகொட்டி வருகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் செய்திகள்