போயஸ் கார்டன் இல்லம் எங்களுக்குதான் சொந்தம், தீபாவை யாரும் தடுக்கவில்லை என தீபக் பேட்டி
சென்னை போயஸ் கார்டன் இல்லம் எனக்கும், என்னுடைய சகோதரி தீபாவிற்கும் சொந்தமானது என தீபக் பேட்டியளித்து உள்ளார்.
சென்னை,
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல ஜெ.தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே தீபா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் செய்தியாளர்கள் தரப்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆங்கிலப் பத்திரிக்கை செய்தியாளர் தாக்கப்பட்டு உள்ளார், கேமரா, மைக் போன்ற உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தீபக் பேசுகையில், போயஸ் தோட்ட இல்லம் எனக்கும், என் சகோதரிக்கும் மட்டுமே சொந்தமானது. போயஸ் தோட்ட இல்லத்திற்கு வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் படத்திற்கு தீபா மரியாதை செலுத்தினார். சகோதரி தீபாவை போயஸ் இல்லத்திற்கு நான்தான் அழைத்தேன். தீபாவை யாரும் தடுக்கவில்லை என்றார்.
தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேசுகையில், போயஸ் தோட்ட இல்லத்திற்கு தீபா எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார். தினகரன் ஆதரவாளர்கள் உள்ளே செல்லவிடாமல் தடுப்பதாக கூறுவது தவறான தகவல் என்றார்.