மு.க. ஸ்டாலின் பச்சோந்தி போல் சந்தர்ப்பவாதியாக செயல்படுகிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஆட்சியை கவிழ்க்க மு.க. ஸ்டாலின் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை,
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் பினாமி அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மாறியிருக்கிறது என தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பச்சோந்தி போல் சந்தர்ப்பவாதியாக செயல்படுகிறார்.
நேரத்திற்கு நேரம் அவர் எண்ணத்தினை மாற்றி கொள்கிறார். அவர் கருத்தை மாற்றி கொள்கிறார். ஆட்சியை கவிழ்க்க மு.க. ஸ்டாலின் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. விரக்தியில் அவர் பேசுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோன்று, மலேசியாவில் வைகோ நுழைய அனுமதி வழங்காதது கண்டனத்திற்குரியது என்றும் இவ்விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. அம்மா அணி கேள்வி எழுப்பும் என்றும் கூறினார்.