தி.நகர் தீ விபத்துக்குள்ளான கட்டடத்தை இடிக்கும் பணியின் போது தொழிலாளி உயிரிழப்பு
தியாகராயநகர் தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியின் போது தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை,
சென்னை தியாகராயநகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் துணிக்கடை இடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கட்டிடம் இடிக்கும் பணியில் ‘ஜா கட்டர்’ எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
10 -வது நாளாக இன்று கட்டிட இடிப்பு பணி நடந்து வந்தது. இந்த நிலையில் 3 மணி அளவில் கட்டடத்தை இடிக்கும் பணியின் போது ‘ஜா கட்டர்’ எந்திரம் மீது இடிபாடு விழுந்தது. அங்கு பணியில் இருந்த சரத் என்ற ஊழியர் பலியானார். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. கட்டட இடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் காவல் துணை ஆணையர் சரவணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.