மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது- தம்பிதுரை எம்.பி
மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறி உள்ளார்.
சென்னை
அதிமுக எம்.பி.யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர கூறியதாவது:-
மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது; மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆர்.கே. நகரில் ஆணையத்தின் நடவடிக்கை தற்காலிகமானதுதான். அதிமுகவில் பிளவு என்பதை தேர்தல் ஆணையமே ஏற்றுக் கொள்ளவில்லை. சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை தமிழகம் ஏற்காது.
மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.