பிளாஸ்டிக் அரிசி விற்றால் கடும் நடவடிக்கை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை

யாராவது பிளாஸ்டிக் அரிசி விற்பதாக தகவல் கிடைத்தால் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-06-10 06:33 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி எங்கும் இல்லை என்றும், அது பற்றி சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக  நிருபரிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி இல்லை. அது இங்கு நுழையவும் முடியாது. சிலர் இந்த வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். என்றாலும் மக்கள் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.அந்த ஆய்வுகள் மூலம் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாராவது பிளாஸ்டிக் அரிசி விற்பதாக தகவல் கிடைத்தால் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . தமிழக அரசு இந்த விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது. சிலர் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பிளாஸ்டிக் அரிசி தயாரிப்பு படங்களை பகிர்ந்து பரப்பி வருகிறார்கள். அப்படி வதந்தி பரப்புவது மாபெரும் குற்றமாகும். அவர்கள் யார் என கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

மேலும் செய்திகள்