தமிழ் நாட்டை ஆள வேண்டும் என ரஜினிகாந்த் கனவிலும் நினைக்க கூடாது சீமான் கடும் தாக்கு

சென்னையை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று முன்தினம் மாலை நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2017-06-09 19:10 GMT
சென்னை

சென்னையை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று முன்தினம் மாலை நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கலந்து கொண்டு பேசியதாவது:–

தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று ரஜினிகாந்த் ஆக இருந்தாலும் சரி, விஷாலாக இருந்தாலும் சரி கனவில் கூட உங்களுக்கு சிந்தனை வந்துவிடக்கூடாது. அப்படி நடைபெற்றால் மானத்தமிழன், மராட்டியன் என தமிழ்நாட்டில் சண்டை நடைபெறும் சூழ்நிலை ஏற்படும்.

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெறவில்லை. பா.ஜனதா ஆட்சி தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால்தான் பல நெருக்கடிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்