சசிகலா, டிடிவி தினகரனை நீக்கினால் மட்டுமே இணைப்பு சாத்தியம்: மாஃபா பாண்டியராஜன்

சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-06-08 09:43 GMT
சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் புயல் வீசி வருகிறது. அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்று இரண்டாக பிரிந்த அ.தி.மு.க. தற்போது 3 ஆக உடைந்துள்ளது. அ.தி.மு.க. (அம்மா) அணியில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அவரை ஆதரித்து வந்த 122 எம்.எல்.ஏ.க்களில் 30க்கும் மேற்பட்டோர் டி.டி.வி.தினகரனை ஆதரிக்க போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இந்த நிலையில், கட்சியில் இருந்து சசிகலா, டிடிவி தினகரனை நீக்கினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அணியைச்சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் அறிவித்த பின்பு  ஆதரவு குறித்து  முடிவு செய்யப்படும்” என்றார். 

மேலும் செய்திகள்