அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சுதாகரனை, 20–ந் தேதி ஆஜர்படுத்த வேண்டும்; சென்னை கோர்ட்டு உத்தரவு
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆகி இருந்தார்.
சென்னை,
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன் மீது தொடரப்பட்டுள்ள அன்னிய செலாவணி மோசடி வழக்கு, சென்னை எழும்பூர் 2–வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. அந்த வழக்கில் சுதாகரனை நேற்று (புதன்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு 2–வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு மலர்மதி, சுதாகரனை வரும் 16–ந் தேதி வரை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாது என்று பெங்களூரு சிறை அதிகாரிகள் தகவல் அனுப்பி உள்ளனர் என்றும், எனவே, இந்த வழக்கை வரும் 20–ந் தேதிக்கு தள்ளி வைப்பதாகவும், அன்றையதினம் சுதாகரனை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.