பள்ளிக்கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 82 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை
பள்ளி கல்வி துறையில் பணியாற்றி இறந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 82 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணையை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
பள்ளி கல்வி துறையில் ஏற்படும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடத்தில் 25 சதவீத பணியிடங்கள், தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் சிறப்பு விதியின் கீழ் கருணை அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர், ஆசிரியரின் இறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட்டு உயிரிழந்த ஊழியர், ஆசிரியரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.
82 பேர்தமிழ்நாடு அரசு 2016–17–ம் ஆண்டிற்கான இளநிலை உதவியாளர் உத்தேச காலிப்பணியிடங்களை நிர்ணயம் செய்து, அவற்றுள் 82 இளநிலை உதவியாளர் பணியிடங்களை கருணை அடிப்படையில் நிரப்ப அரசாணை வெளியிட்டது.
அதன்படி, பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான ஊழியர்கள், ஆசிரியர்களின் 82 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி வழங்கினார்அதன் அடையாளமாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5–ந் தேதியன்று (நேற்று) தலைமைச் செயலகத்தில், 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக்கல்வி துறை செயலாளர் த.உதயச்சந்திரன், பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குனர் எஸ்.கார்மேகம் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.