ஐகோர்ட்டில் வழக்கறிஞர் உணவகம் திறப்பு; தலைமை நீதிபதி, அமைச்சர் பங்கேற்பு

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம் நடத்தும் உணவகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

Update: 2017-06-05 19:15 GMT

சென்னை,

புதிய கட்டிடத்தில் உணவகம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

இந்த கட்டிட திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. இதில், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கலந்துகொண்டு உணவகத்தை திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.சத்தியநாராயணன், எஸ்.விமலா, புஷ்பா சத்தியநாராயணா, எம்.வி.முரளிதரன், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்ட அனைவரையும், வழக்கறிஞர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வக்கீல் எஸ்.திவாகர் வரவேற்றார். துணை தலைவர் எஸ்.பூங்கொடி நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்