டி.டி.வி.தினகரன் ரகசிய ஆலோசனை சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகே அடுத்தக்கட்ட முடிவு
சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகே அடுத்தக்கட்ட முடிவை எடுக்க இருக்கிறார்.
திகார் சிறையில் டி.டி.வி.தினகரன்
ஜெயலலிதா மறைவுக்கு பின்னால், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை செல்லும் முன், கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியையும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியையும் இணைப்பதற்கான பணிகள் தொடங்கின. ஆனால், அந்த முயற்சி வெற்றி அடையவில்லை. தொடர்ந்து இரு அணிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்காமல் இழுபறி நிலையிலேயே இருந்து வருகிறது.
ஜாமீன் கிடைத்தது
இந்த நிலையில், 34 நாட்களாக சிறை வாசம் அனுபவித்த, டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது. சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.வி.தினகரனை, அவரது ஆதரவாளர்கள் டெல்லி சென்றே வரவேற்றனர்.
சென்னை புறப்படும் முன்பு, டெல்லியில் பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், “என்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது. என்னை நியமித்த பொதுச் செயலாளருக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கிறது. தொடர்ந்து கட்சி பணிகளை கவனிப்பேன்” என்று தடாலடியாக கூறினார்.
சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய டி.டி.வி.தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர், பெசன்ட்நகரில் உள்ள வீட்டிற்கு வந்த அவர் இரவோடு இரவாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, டி.டி.வி.தினகரன் சிறை சென்ற நேரத்தில், அ.தி.மு.க. அம்மா அணியினரின் நடவடிக்கைகள் குறித்து, அவரிடம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ரகசிய ஆலோசனை
இந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு டி.டி.வி.தினகரன் வர இருக்கிறார் என்று தகவல் பரவியது. அடையாறு வீட்டில் இருந்து புறப்பட்ட டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வரவில்லை. மாறாக, வேறு எங்கேயோ ரகசிய இடத்திற்கு சென்று, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) அதிகாலை அவர் பெங்களூரு செல்கிறார். காலை 11 மணிக்கு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரியை சந்திக்கும் டி.டி.வி.தினகரன், சசிகலாவை சந்திப்பதற்கான அனுமதி கடிதத்தை வழங்குகிறார்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை
பரப்பன அக்ரஹார சிறை கைதிகளை வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே, இன்று மாலைக்குள் சசிகலாவை டி.டி.வி.தினகரன் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு அனுமதி கிடைக்காத பட்சத்தில், ஒரு நாள் கழித்து புதன்கிழமை தான் சசிகலாவை சந்திக்க முடியும்.
சசிகலாவை டி.டி.வி.தினகரன் சந்திக்கும்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகிகளின் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிப்பார் என தெரிகிறது. சசிகலாவின் முடிவை வைத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்க டி.டி.வி.தினகரன் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.