காமராஜர் ஆட்சியை அமைக்க உறுதி ஏற்கிறோம் ராகுல்காந்தி முன்னிலையில் திருநாவுக்கரசர் பேச்சு
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க உறுதி ஏற்கிறோம் என்று ராகுல்காந்தி முன்னிலையில் திருநாவுக்கரசர் பேசினார்.
சென்னை,
சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நினைவுப் பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மத்தியில் புதிய ஆட்சி
இன்றைக்கு நாட்டில் எத்தனை பிரச்சினைகள் இருக்கிறது. விவசாயிகள் போராடுகிறார்கள். டெல்லியில் போராடிய விவசாயிகளை பிரதமர் சென்று பார்க்கவில்லை. நம்முடைய தலைவர் ராகுல்காந்தி சென்று பார்த்தார். அவர்களுடன் இருந்து அவர்களின் குறைகளை கேட்டார். எங்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கே இன்றைக்கு உங்களை (ராகுல்காந்தி) விட்டால் யாரும் இல்லை. மோடி அரசை அகற்றி, புதிய ஆட்சியை உங்களால் மட்டும் தான் அமைத்து தர முடியும். தற்போது இருக்கும் அரசு மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது. யார் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்வதற்கு மோடிக்கு என்ன உரிமை இருக்கிறது?. இதற்கு முடிவு கட்ட வேண்டும்.
நேரு குடும்பத்தை தமிழக மக்கள் மிகவும் நேசிக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் நமக்காக இந்த இடத்தை (சத்தியமூர்த்தி பவன்) பெற்றுத் தந்து இருக்கிறார். தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டார். நம்முடைய தலைவர் ராஜீவ்காந்தி இந்த மண்ணில் ரத்தம் சிந்தி இருக்கிறார்.
காமராஜர்
ராஜீவ்காந்தி செய்த தியாகத்திற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?. இங்கே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் பலப்படுத்துவோம் என்ற உறுதிமொழியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்ற உறுதிமொழியை ராகுல்காந்திக்கு நாம் இன்றைக்கு அளிக்கிறோம். இதனை நிச்சயமாக நிறைவேற்றியே தீருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.