ஜி.சாட்-19 செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று (திங்கட்கிழமை) விண்ணில் பாய்கிறது.
சென்னை,
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) குறைவான எடைகொண்ட செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும், 2 முதல் 2½ டன் எடைகொண்ட செயற்கைகோள்களை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும் விண்ணில் செலுத்தி வருகிறது.
இதைவிட அதிக எடைகொண்ட செயற்கைகோள்கள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதை மாற்றியமைக்கும் விதமாக கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்து இருக்கிறது.
இந்த வகை ராக்கெட்டின் முதல் பயணம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. மாலை 5:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.
எடை 3,136 கிலோ
இதில் எடுத்து செல்லப்படும் ஜி.சாட்-19 தகவல் தொடர்பு செயற்கைகோள் 3 ஆயிரத்து 136 கிலோ எடைகொண்டது ஆகும். நவீன வசதிகளுடனான தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர்களை கொண்டு உள்ளது. இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்ளும்.
பூமியில் இருந்து இந்த செயற்கைகோள் குறைந்தபட்சம் 179 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படும். இதில் 4 ஆயிரத்து 500 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள், 2 ஆன்டெனாக்கள், சூரிய தகடுகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
‘கவுன்ட்டவுன்’ தொடங்கியது
இந்த நிலையில், தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் இன்று மாலை 5.28 மணிக்கு விண்ணில் பாய உள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டுக்கான 25½ மணி நேர ‘கவுன்ட்டவுன்’ நேற்று மாலை 3:58 மணிக்கு தொடங்கியது. கவுன்ட்டவுன் தொடங்கியதில் இருந்து ராக்கெட்டின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும், ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ள நேரத்தில், வானிலை நிலவரம், காலநிலை மாறுபாடு எவ்வாறு இருக்கும் என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.
கிரண்குமார் பேட்டி
சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் கிரண்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-
மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று(திங்கட்கிழமை) மாலை 5.28 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். இதற்கான அனைத்து ஆயத்த பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. ராக்கெட் புறப்பட தயார் நிலையில் உள்ளது. இது தகவல் தொலை தொடர்புக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்தியாவுக்கு அவசியமானதாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.