மதுபானங்களின் விலை உயர்வு ரூ.100க்கு குறைவாக எதுவும் இல்லை
டாஸ்மார்க் மது விற்பனை கூடங்களில் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது.
சென்னை
தமிழகத்தில் மதுவின் தீமைகள் குறித்து உருவான விழிப்புணர்வால் ஆங்காங்கே மதுக்கடைகளுக்கு ஏதிராக சட்ட போராட்டங்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.இந்தநிலையில் தமிழகத்தில் மதுவிலக்கு படிபடியாக கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது அதன் படி தமிழகத்தில் அரசின் முனைப்போடு 1000 கடைக்கள் மூடப்பட்டுள்ளன.
தேசிய-மாநில நெடுஞ்சாலைகளின் அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரமும், பேரூராட்சி மற்றும் கிராமப் புறங்களில் நெடுஞ்சாலைகளிலிருந்து 220 மீட்டர் தூரம் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் கடந்த 1-ந்தேதி மூடப்பட்டன.சட்டப்போராட்டங்களின் விளைவால் உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் 3321 கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் ஊருக்குள் இருக்கும் கடைகளில் கூட்டம் அலைமோதியது புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி மற்றும் பல பகுதிகளில் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.
3321 கடைகள் மூடப்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கு தினமும் ரூ.13 கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.