முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு
முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வததை சந்தித்து அவரது அணிக்கு ஆதரவு தெரிவித்தார்
சென்னை
1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார் கண்ணப்பன்.
1996ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார். 2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார்.
2006ம் ஆண்டு இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமைச்சர் பெரியகருப்பனுடன் மோதல் ஏற்பட்டது என்றும், அதனால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாகவும் முன்பு செய்தி வெளியானது. இந்த நிலையில் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தார். அதிமுகவில் முக்கியத்துவம் இல்லை என்ற வருத்தம், ராஜ கண்ணப்பனுக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட, சீட் கிடைக்கும் என, எதிர்பார்த்தார், நடக்கவில்லை.
இந்த நிலையில் சசிகலா குடும்பத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் தலைஅமைஅயில் ஒரு தரப்பினர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அவர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவைத்தலைவர் மதுசூதனை நிறுத்தி உள்ளனர். இந்த நிலையில் இன்று ஓ.பன்னீர்ச் செல்வத்தை சந்தித்த ராஜ கண்ணப்பன் அவரது அணியில் இணைந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தலில் ஓபிஎஸ் அணி வெற்றி பெறும். ஆர்.கே.நகரில் மதுசூதனன் வெற்றி பெறுவது ஜனநாயகம் வெற்றி பெறுவதாகும் என கூறினார்.