சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை 30–ந் தேதி வரை நீடிப்பு
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வருகிற 30–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொலைதூர கல்வி நிறுவன ஒற்றைச்சாளர சேர்க்கை மையம் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதன் விவரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு பேராசிரியர் எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார்.