ஆர்.கே.நகரில் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்-தீபா பேரவை

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடப்பதாக தீபா பேரவையினர் புகார் செய்துள்ளனர்.

Update: 2017-04-01 09:13 GMT

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் எம்.ஜி-.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் இவர் தனது பிரசாரத்தை தொடங்கினார்.இந்த நிலையில் தீபா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், உயர்மட்டக் குழு உறுப்பினரும் செய்தி தொடர்பாளருமான தொண்டன் சுப்பிரமணி ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் பி நாயரிடம் இன்று ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்று வருகிறது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் நிருபர்களிடம் கூறியதாவது-

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். அணியினரும், தி.மு.க. வினரும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த வருகிறார்கள். இதற்கு தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் உடைந்தையாக உள்ளனர். எனவே, மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்