பெட்ரோலியத்துறை மந்திரியை ஓரிரு நாளில் சந்திக்க உள்ளோம் நெடுவாசல் போராட்டக் குழு அறிவிப்பு
மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியை ஓரிரு நாளில் சந்திக்க உள்ளதாக நெடுவாசல் போராட்டக் குழு அறிவித்துள்ளனர்.
சென்னை,
அப்போது அவர்கள் பேசியதாவது:
ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும். நாளை பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசையை சந்தித்து திட்டத்தை கைவிட வலியுறுத்துவோம். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்திக்க தமிழக பாஜக ஏற்பாடு செய்துள்ளது. அவரை ஓரிரு நாளில் சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.