கோவை நகைக்கடையில் கத்தி முனையில் 4 கிலோ தங்கம் கொள்ளை

கோவையில் நகைக்கடையில் கத்தி முனையில் 4 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2017-03-02 12:21 GMT
கோவை,

கோவை ராஜ வீதி பகுதியில் உள்ள பிரபல சிட்டி கோல்ட் நகைக்கடையில் கத்தியை காட்டி 4 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளை அடித்து உள்ளனர்.

அந்த கடையின் வாகன ஓட்டுநர் ரியாசுதீன் உளபட 3 பேர் கொண்ட கும்பல் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து உள்ளதாக போலீசார் தரப்பில்

தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர் ரியாசுதீன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்