துயர சம்பவங்களில் உயிரிழந்த 20 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

துயர சம்பவங்களில் உயிரிழந்த 20 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2017-03-02 09:32 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சண்முகம்; ஈரோடு மாவட்டம், நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சண்முகம்.

சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் காவல ராகப் பணி புரிந்து வந்த ஏனோக் திருத்துவதாஸ்; சேலம் மாநகரம், அழகா புரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கோவிந்த ராஜ்; திருச்சி மாநகரம், வெடி குண்டு மற்றும் செயல் இழப்பு பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பாக்கியம்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த வெங்கடேசன்; நத்தம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த நடராஜன்.சேலம் மாநகரம், வடக்கு போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சடையன்; கிருஷ்ணகிரி போக்கு வரத்துப் பிரிவில் முதல் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த ஜெகதீசன்.

திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தங்கவேல்; மதுரை மாநகர், மது விலக்கு அமலாக்கப் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரகுராமன்; திடீர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சேகர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரியமங்கலம் போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராமமூர்த்தி.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பரமகிருஷ்ணன்; சேலம் மாநகரம், ஆயுதப்படை, 3-ம் பிரிவில் முதுநிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கணேசன்.மதுரை மாநகர ஆயுதப் படைப் பிரிவில், இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சேகர்.

கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிப்பாளைய காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வீரசாமி; தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பூமிராஜ்.

கடலூர் மாவட்டம், ரெட்டிசாவடி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த பழனிவேல்.தஞ்சாவூர் மாவட்டம் ஆயுதப்படை பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரெங்கராஜ்; ஆகியோர் பல்வேறு நிகழ்வு களில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

20 காவலர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்