பிறந்தநாளை கொண்டாடாத பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நேற்று 65–வது பிறந்த நாள். 1952–ம் ஆண்டு மார்ச் மாதம் 1–ந் தேதி பிறந்த பொன்.ராதாகிருஷ்ணன் எப்போதும் தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை.
சென்னை,
கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு, அதோடு பிறந்த நாளை மறந்துவிட்டு வழக்கமான பணிகளை மேற்கொள்ள தொடங்கிவிடுவார். முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என யாரையும் அவர் சந்தித்து வாழ்த்து பெறுவது கிடையாது.தனது பிறந்த நாளான நேற்று மன்னார்குடி அருகே மதுக்கூர் என்ற கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.