தியாகராயநகரில் ஜவுளிக்கடை ஊழியர் மர்ம சாவு; போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (வயது 22).

Update: 2017-02-28 23:32 GMT

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடையின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு தனது அறையில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். சக ஊழியர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஜோசப்பின் மர்ம சாவு தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஏற்கனவே காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் செய்திகள்