200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை உள்ளிட்ட சீதன பொருட்கள்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருச்செந்தூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை உள்ளிட்ட சீதன பொருட்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Update: 2022-10-12 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை உள்ளிட்ட சீதன பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

சமுதாய வளைகாப்பு விழா

திருச்செந்தூர் வட்டார கர்ப்பிணி பெண்களுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. திருச்செந்தூரில் தனியார் திருமண மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) ரூபி பெர்ணான்டோ வரவேற்று பேசினார். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்டம் குறித்து விளக்கி பேசினார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

பின்னர் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை உள்ளிட்ட சீதன பொருட்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, ஆணையாளர் வேலவன், துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணராஜா, வட்டார திட்ட அலுவலர் மரிய ஒளி பாபி,நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து துணை தலைவர் ஜெகதீஸ் வி.ராயன உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மகளிர்சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி

மேலும், தென்திருப்பேரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ரூ.47 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவி வழங்கினார். மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், வட்டார அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் அமைச்சர் பரிசு வழங்கினார். பின்னர் சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி வழங்கப்பட்டது. வருவாய் துறை அலுவலக கட்டிடம் மற்றும் குடியிருப்பையும், மேலகடம்பா பகுதியில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சிக்கு தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் முன்னிலை வகித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், நகரச்செயலாளர் முத்துவீரபெருமாள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள், சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்