லாரியில் கடத்தி வந்த 200 கிலோ கஞ்சா பறிமுதல்..!

லாரியில் கடத்தி வந்த 200 கிலோ கஞ்சாவை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-09-10 06:39 GMT

மதுரை,

மதுரை விக்கிரமங்கலம் அருகே தனிப்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லாரியை மறித்து சோதனை மேற்கொண்டணர். அதில் லாரியில் மறைத்து வைத்து 200 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனடியாக டிரைவரையும் அவருடன் லாரியில் வந்த மற்றொருவரையும் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து, 200 கிலோ கஞ்சா மற்றும் லாரியை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் டிரைவர் சமில் அகமது என்றும் மற்றொருவர் விஜயகுமார் எனவும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது தனிப்படை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்