திருமங்கலத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 200 பேர் கைது

திருமங்கலத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-04-15 21:07 GMT

திருமங்கலம்

ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திருமங்கலம் தேவர் சிலையிலிருந்து மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமையில் காங்கிரஸ் கமிட்டி செயலாளர் இளங்கோவன் முன்னிலையிலும், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிக்குமார், காமாட்சி ராமசாமி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, நகரத் தலைவர் சவுந்தரபாண்டி, வட்டாரத் தலைவர்கள் முருகேசன், கணேசன், சற்குணம், மணிகண்டன், ஓ.பி.சி. மாவட்ட தலைவர் சரவணன் பகவான், நகரச் செயலாளர் ராஜா தேசிங் உட்பட 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்