சூறாவளி காற்றால் 200 ஏக்கர் வாழைகள் சேதம்

தொண்டாமுத்தூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் 200 ஏக்கர் வாழைகள் சேதமடைந்தன. அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-05-14 19:00 GMT

தொண்டாமுத்தூர்

தொண்டாமுத்தூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் 200 ஏக்கர் வாழைகள் சேதமடைந்தன. அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சூறாவளி காற்று

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளன. தண்ணீர் செழிப்பான இந்த பகுதியில் விவசாயிகள் வாழை, மஞ்சள், நெல், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர்.

தற்போது இக்கரை போளுவாம்பட்டி, பூலுவப்பட்டி, மத்வராய புரம், செம்மேடு, இருட்டுப்பள்ளம், சாடிவயல் உள்ளிட்ட பகுதிகளில் வாழைகள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.

சூறாவளி காற்றுடன் மழை

இந்த நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அப்போது பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இதன் காரணமாக ஏராளமான வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்து உள்ளன.

இதுதவிர பாக்கு, தென்னை மரங்களும் சேதமடைந்து உள்ளது. எனவே சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

200 ஏக்கரில் வாழைகள்

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

மத்வராயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யும் போது ஒரு சில இடங்களில் மட்டும் திடீரென்று சூறாவளி காற்று வீசியது. இதில் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசமானது.

இதுதவிர 1000 தென்னை மரங்கள், 3 ஆயிரம் பாக்கு மரங்களும் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் முறிந்தன. இந்த மாதத்தில் மட்டும் 2-வது முறையாக சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளது.

அதிகாரிகள் வரவில்லை

சேதமடைந்த வாழைகள் அனைத்தும் ஒருமாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்தன. ஆனால் இது தொடர்பாக தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் வந்து முறையாக ஆய்வு செய்யவில்லை. வேளாண் துறையை சேர்ந்த 2 ஊழியர்கள் மட்டும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.

உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தால்தான் விவசாயிகளுக்கு இழப் பீடு கிடைக்கும். எனவே சேதமடைந்த பயிர்களை உயர் அதிகா ரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இழப்பீடு வழங்க வேண்டும்

மாவட்டம் முழுவதும் 50 சதவீதத்துக்கும் மேல் இயற்கையால் பயிர் சேதமடைந்து இருந்தால் மட்டும் தான் நஷ்டஈடு கொடுப் போம் என்று காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

இதனால் பயிர்களுக்கு காப்பீடு செய்து இருந்தாலும் உரிய இழப் பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் தருவது இல்லை.

இதன் காரண மாக விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைப்பது இல்லை. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயிர்களுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்