டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் கதிர்வேல்சாமி (வயது 50). தனியார் நிறுவனத்தில் டிரைவராக உள்ளார். இவர் கடந்த 24.9.2020 அன்று 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிர்வேல்சாமியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து டிரைவர் கதிர்வேல்சாமிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்தார்.