மேற்கு மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் மேற்கு மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக கே.டி. ராேஜந்திரபாலாஜி கூறினார்.

Update: 2023-08-17 18:59 GMT

சிவகாசி, 

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் மேற்கு மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக கே.டி. ராேஜந்திரபாலாஜி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

மதுரையில் வருகிற 20-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநில மாநாடு ஏற்பாடுகள் குறித்து விருதுநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று காலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சை கேட்க நாம் அனைவரும் அணி திரண்டு செல்ல வேண்டும். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக சென்று வர வேண்டும்.

2 கோடி தொண்டர்கள்

தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான ஏற்பாடுகளை உங்கள் பகுதி நிர்வாகிகள் செய்து கொடுப்பார்கள். 2 கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. வளர்ந்துள்ளது. டெல்லியில் உள்ள அரசியல் தலைவர்கள் அ.தி.மு.க.வை பிரமிப்பாக பார்க்கிறார்கள்.

இந்த மாநாட்டில் அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு சிறப்பாக நடைபெற விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மான்ராஜ் எம்.எல்.ஏ., சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், சிவகாசி மாநகர பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், ஷாம், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லயன் லட்சுமி நாராயணன், கருப்பசாமி, வெங்கடேஷ், மகளிர் அணி செயலாளர் சுடர்வள்ளி சசிகுமார், இளநீர் செல்வம், இளைஞரணி கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்