பெத்தநாயக்கன்பாளையம்:-
கருமந்துறை செல்லாங்குறிச்சி பகுதியில் சாலையோரம் இருந்த 20-க்கும் மேற்பட்ட சில்வர் ஓக் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் வெட்டி கடத்தப்பட்ட மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கருமந்துறை வனச்சரகர் ஆரோக்கியசாமி கூறுகையில், மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மரங்களை வெட்டுவதற்கு முன்பு மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறப்பட்டுள்ளதா? என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.