கோவையில் 20 ரேஷன் கடைகளில்ரூ.60-க்கு தக்காளி விற்பனை

கோவையில் 20 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை தொடங்கியது. இதனை பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர்.

Update: 2023-07-12 19:00 GMT

கோவை

கோவையில் 20 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை தொடங்கியது. இதனை பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர்.

தக்காளி விலை உயர்வு

அன்றாட சமையலில் முக்கிய பங்கு தக்காளிக்கு உண்டு. சைவம், அசைவம் என்று அனைத்து சமையல்களிலுமே தக்காளியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக நாடுமுழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது.

நாளுக்கு நாள் தக்காளியின் விலை அதிகரிப்பதால் தற்போது, சமையலில் தக்காளியின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது. பெரும்பாலானவர்கள் தக்காளி இல்லாமலேயே சமைக்க தொடங்கி விட்டனர். பெரும்பாலான ஓட்டல்களிலும் தக்காளி சட்னி, தக்காளி சாதம் நிறுத்தப்பட்டு விட்டன.

கோவையை பொறுத்த வரை காய்கறி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120-க்கு விற்பனையாகி வருகிறது. இருந்தபோதிலும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட உழவர் சந்தைகளில் நாட்டு தக்காளி ரூ.80-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரேஷன் கடைகளில் நேற்று முதல் தக்காளி விற்பனை தொடங்கியது.

ரேஷன் கடையில் விற்பனை

அதன்படி கோவை மாவட்டத்தில் 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு தக்காளி கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 9 மணி முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையானது தொடங்கி நடைபெற்றது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்களும் ரேஷன்கடைகளில் போட்டிப்போட்டு தக்காளியை வாங்கி சென்றனர். ஒரு நபருக்கு 1 கிலோ தக்காளி மட்டும் விற்பனை செய்யப் பட்டது. தக்காளியை ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுத்த அரசுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து கூட்டுற வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கும் வசதியாக கோவை மாவட்டத்தில் 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முதல் ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைகளிலும் தலா 25 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி வாங்கி பயன் அடையலாம்.

Tags:    

மேலும் செய்திகள்