20 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
தமிழக காவல்துறையில் 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து தற்போது தலைமை காவலர்களாக உள்ள 20 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
அவர்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது அவர் காவல்துறையில் சட்டப்படியும், மனிதாபிமானத்துடனும், சிறப்பாக பணிபுரியும் அறிவுரைகள் வழங்கி பணி சிறக்க வாழ்த்துகள் தெரிவித்தார்.