டாஸ்மாக் கடையை மூட வந்த புதிய தமிழகம் கட்சியினர் 20 பேர் கைது

டாஸ்மாக் கடையை மூட வந்த புதிய தமிழகம் கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-15 18:47 GMT

கெங்கவல்லி

புதிய தமிழகம் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் 20 பேர் கெங்கவல்லியில் தம்மம்பட்டி சாலையில் உள்ள தமிழக அரசின் டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் போராட்டம் நடத்த அங்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், நிர்மலா, மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 20 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்