20 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்

20 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-08-29 20:37 GMT


விருதுநகர் பறக்கும் படை தாசில்தார் ரமணா விருதுநகர் புறவழிச்சாலையில் வடமலைகுறிச்சி விலக்கு அருகே வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தார். வேனில் தலா 40 கிலோ கொண்ட 20 மூடைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதுகுறித்து தாசில்தார் ரமணா விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து 20 மூடை ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்தனர். வேனில் இருந்த மதுரை காமராஜர் ரோட்டை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (வயது50), மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த கண்ணன் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்