ரெயில் மறியலுக்கு முயன்ற 20 பேர் கைது

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில் மறியலுக்கு முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-06-23 13:18 GMT

கோவை

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில் மறியலுக்கு முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு

ராணுவத்துக்கு ஆள்சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநி லங்கள் மட்டுமின்றி தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திராவிடர் தமிழர் கட்சி சார்பில் கோவை ரெயில்நிலையத்தை முற்றுகையிட்டு ரெயில் மறியல் போராட் டம் நடத்த நேற்று அக்கட்சியினர் 25 பேர் வந்தனர். இதை யொட்டி கோவை ரெயில்நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

அங்கு வந்த போராட்டக்காரர்களை ரெயில் நிலையத்துக்குள் விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக் காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட் டது.

இதற்கு மாவட்ட செயலாளர் நந்தன் தம்பி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மாநில தொழிற்சங்க தலைவர் களப்பிரர், மாவட்ட தலைவர் பிரபு, சுகுமார் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்க ளை போலீசார் வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அன்னூர்

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் புலிகள் கட்சி சார்பில் நேற்று அன்னூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்காக அவர்கள் கைகாட்டியில் இருந்து ஊர்வலமாக அன்னூர் கலால் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்