துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான 2 வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு

சேலத்தில் வாடகை வீட்டில் துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான 2 வாலிபர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2022-10-11 22:39 GMT

சேலம், 

துப்பாக்கி தயாரிப்பு

சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் சஞ்சய்பிரகாஷ் (வயது 25). என்ஜினீயர். எருமாபாளையத்தை சேர்ந்தவர் நவீன்சக்கரவர்த்தி (25). பட்டதாரி. நண்பர்களான இருவரும் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பின்னர் கியூ பிராஞ்ச் போலீசாருக்கு மாற்றப்பட்டது. கியூ பிராஞ்ச் போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

தேசிய புலனாய்வு முகமை

பின்னர் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை நடத்திய போது அங்கு துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான பொருட்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சேலம் வந்து அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய்பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகிய 2 பேரையும் போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்