2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-01-26 20:52 GMT

நெல்லை டவுன் குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சாப்பிட வந்தனர். அப்போது அங்கு காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அந்த நபர்களை கொலை செய்ய வெடிகுண்டுகளை வீசியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமாரி (வயது 30), கோவில்பட்டி ஆவுடையம்மாள்புரத்தை சேர்ந்த அஜித்குமார் (27) உள்ளிட்டவர்களை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் போலீஷ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று இசக்கிமாரி, அஜித்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்