2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பாளையங்கோட்டை அருகே 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-11-02 20:13 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி கார்மேகநகரை சேர்ந்த ரத்தினபாண்டி என்பவரின் மகன் மாணிக்கம் என்ற மகேஷ் (வயது 28). கிருஷ்ணாபுரம் கலைகோவில் நகரை சேர்ந்த முத்தையா மகன் வினோத் என்ற வினோத்குமார் (29). இவர்கள் 2 பேரும் சிவந்திப்பட்டி பகுதியில் கொலை முயற்சி மற்றும் மணல் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 2 பேரும் தொடர்ந்து பிரச்சினைகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இதனை ஏற்று, 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், கலெக்டரின் உத்தரவை பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்