2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

முக்கூடல், நாங்குநேரியில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-09-20 19:28 GMT

முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரம், வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பா மகன் பேச்சிகணேஷ் (வயது 23). இவரை அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் முக்கூடல் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், முக்கூடல் இன்ஸ்பெக்டர் கோகிலா ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

அதை கலெக்டர் விஷ்ணு ஏற்று பேச்சிகணேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் கோகிலா பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கினார்.

நாங்குநேரி அருகே உள்ள தம்புபுரத்தை சேர்ந்தவர் நவீன் (21). இவர் மீது நாங்குநேரி போலீசார் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

அதை கலெக்டர் விஷ்ணு ஏற்று நவீனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்