பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தமபாளையம் கோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2022-07-23 16:31 GMT

உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியை சேர்ந்தவர் சாந்தா (வயது 67). இவர், அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி, சென்னையை சேர்ந்த லோகன்துரை (27) மதுரையை சேர்ந்த பாண்டி (28) ஆகிய 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் சாந்தாவிடம் குளிர்பானம் வாங்குவது போல் நடித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் |சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது உத்தமபாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ராமநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், நகை பறிப்பில் ஈடுபட்ட லோகன் துரை, பாண்டி ஆகிய 2 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்