வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

விக்கிரவாண்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-01-14 18:45 GMT

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி போலீசார் பனையபுரம் கூட்ரோடு பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பண்ருட்டி பைத்தாம்பாடியை சேர்ந்த சரத்குமார்(21), திருச்செங்கோடு அருகே உள்ள வைப்பமலையை சேர்ந்த பிரகாஷ்(25) ஆகியோர் என்பதும், தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1 கத்தி, 3 செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்