மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஜோலார்பேட்டை அருகே உள்ள பெரிய பொன்னேரி மாரியம்மன் கோயில் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகன் லோகேஷ் (வயது 17). அதேப் பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் சதீஷ் (17). செந்திகுமாருக்கு சொந்தமான புதிய மோட்டார்சைக்கிளில் லோகேஷ்,சதீஸ் ஆகிய இருவரும் பொன்னேரி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றனர்.
சாலை நகர் அருகே சென்றபோது எதிரே திருப்பத்துாரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இ௸ில் இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்கள் திருப்பத்துார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அரசு பஸ் டிரைவர் செந்தில் குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.