பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள் கைது
பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூசி
பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள குண்டியாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திக் மற்றும் உத்திரமேரூரை அடுத்த கருவேப்பம் நகரைச் சேர்ந்த சங்கர் மகன் அரவிந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மது குடித்துள்ளனர். பின்னர் அவர்கள் போதையில் நாங்களும் ரவுடிதான் என பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்தனர்.
இதனை அந்த பகுதியில் இருந்த ஏகாம்பரம் மகன் சபேஸ் தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த கார்த்திக், அரவிந்தன் ஆகியோர் ஆபாசமாக பேசி கையில் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து பொதுமக்கள் மீது வீசினார்கள்.
இதைப்பார்த்து சுதாரித்துக் கொண்டு ஒதுங்கவே தீயில் இருந்து தப்பினர். உடனே கிராம மக்கள் இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடிக்க முயற்சித்தபோது இருவரும் மோட்டார்சைக்கிளில் தப்பித்துச் சென்றனர்.
இது குறித்து சபேஸ் நேற்று தூசி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து கிராமத்தில் ரவுடி தனம் செய்து பெட்ரோல் குண்டு வீசிய கார்த்திக், அரவிந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.