பொதுமக்களிடம் பணம் கேட்டுமிரட்டிய 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி அருகே பொதுமக்களிடம் பணம் கேட்டுமிரட்டிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-25 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மறவன்மடம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக சிலர் பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்து கொண்டு இருந்தார்களாம். உடனடியாக போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மறவன்மடத்தை சேர்ந்த அர்ச்சுனன் மகன் முருகன் (32), தாளமுத்துநகர் ஓம் சக்கி நகரைச் சேர்ந்த மாரிகுமார் மகன் கண்ணன் என்ற ரமேஷ் (24) என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகன் மீது ஏற்கனவே 19 வழக்குகளும், கண்ணன் என்ற ரமேஷ் மீது 14 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்