பெண்ணுக்கு பாலியல் தொல்லை வாலிபர்கள் 2 பேர் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-04-13 21:44 GMT


மதுரை கீரைத்துறையை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கூடலழகர் பெருமாள் கோவில் பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கூடலழகர் கோவில் அருகில் உள்ள வைகுண்ட ஏகாதசி மண்டபத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் தனியாக படுத்திருந்த அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் அந்தப் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து அந்த பெண் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் காசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெய்ஹிந்த்புரம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வினோத் என்ற சித்தன்(35), மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த அஜித் நாகராஜ் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்