லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது
திட்டக்குடியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது
ராமநத்தம்
திட்டக்குடி பெரியகோவில் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது அங்கு தடை லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜன் மகன் பாலாஜி(வயது 31), இவரது நண்பர் பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் கிராமம் சுப்பிரமணியன் மகன் அருண்குமார்(31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.