கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

Update: 2022-08-09 15:57 GMT

புதுக்கடை:

புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகருக்கு முன்சிறை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் முன்சிறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும் வகையில் நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த லிவிங்ஸ்டன் புரோ(வயது 22), முபின்(25) என்பதும், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்